search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மா.சுப்ரமணியன்"

    அம்மா கிளினிக் மூலம் பயன்பெற்றவர்கள் விவரத்தையும், அம்மா கிளினிக்கில் பணியமர்த்தப்பட்டவர்களின் விவரத்தையும் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    திருவொற்றியூர:

    சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள கத்திவாக்கம் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 10-வது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 10-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் முகாம் நடைபெற்று வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனைப்படி கடந்த 10-ந்தேதி துவக்கப்பட்ட இல்லம் தேடி தடுப்பூசி போடுவது மற்றும் மருத்துவ திட்டத்தின்கீழ் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி 70 சதவிகிதமும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி 35 சதவிகிதமும் போடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை 80 சதவிகித தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

     

    கொரோனா தடுப்பூசி

    அம்மா கிளினிக்குக்கு பதிலாக இல்லம் தேடி மருத்துவம் கொண்டு வரப்படவில்லை. அம்மா கிளினிக்கை விட கடந்த 6 மாதங்களில் அதிகளவிலான மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    2 ஆயிரம் அம்மா கிளினிக்குகள் திறக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவித்துவிட்டு அவசர அவசரமாக அம்மா கிளினிக் பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 1900 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் ஒரு நர்சு கூட தேர்வு செய்யப்படவில்லை.

    அம்மா கிளினிக் மூலம் பயன்பெற்றவர்கள் விவரத்தையும், அம்மா கிளினிக்கில் பணியமர்த்தப்பட்டவர்களின் விவரத்தையும் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    நம் நாடு ஜனநாயக நாடு. பொது இடங்களுக்கு தடுப்பூசிகள் போட்டவர்கள் தான் செல்ல வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் தன்னிலை அறிந்து பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதனை பின்னால் சென்று கண்காணிக்க இயலாது.

    இந்த அரசாணைக்கு பிறகு நேற்று பல இடங்களில் பொதுமக்கள் சினிமா, மால்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமே என தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர்

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை மாநகர ஆணையாளர் ககன் தீப்சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையும் படியுங்கள்... இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றால் தக்க பதிலடி- ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

    ×